இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் முதல் முறையாக கார்கில் விமான ஓடுதளத்தில் தரையிரங்கியது.
1990களில் பயன்பாட்டுக்கு வந்த இவ்வகை விமானம் பெரிய சரக்கு பெட்டகங்களை உள்ளடக்கியுள்ளது. ஆபத்து காலங்களில் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் இந்த விமானம் பல்வேறு நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோப்மாஸ்டர் விமானம் முதல் முறையாக கார்கில் விமான ஓடுதளத்தில் தரையிரங்கியது. முன்னதாக இந்த விமானம் ஸ்ரீநகர் மற்றும் லே விமான தளங்களில் இருந்து மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.