சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஓய்வு பெற்ற வீரர்களுக்கான முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அபாரமாக விளையாடி 269 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.