போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை ரஷ்ய அதிபர் புதின் அவமதித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. இந்தப் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், ராணுவ வீரர்களின் கல்லறைகள் சேதமடைந்து பராமரிப்பின்றி காணப்படும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரும் பொதுமக்கள், இதுதான் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை புதின் மதிக்கும் விதமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.