மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 10 லட்சம் கையெழுத்துகளை பெறவுள்ளதாக, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிறுத்தத்தில் பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சேலம் சென்ற கே.பி.ராமலிங்கம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதலமைச்சரின் தவறான புரிதலை திருத்தும் மருந்தாக கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ளதாக கூறினார்.