தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யானை தாக்கி இருவர் காயமடைந்தனர்.
பென்னாகரம் அருகே உள்ள பூனைகுண்டு காட்டுக் கொள்ளை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் வடிவேலு ஆகியோர் வனப் பகுதியை ஒட்டி உள்ள விளைநிலத்தில் இரவு காவலுக்காக தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அங்கு நடமாடிய ஒற்றை யானை, அவர்களை தாக்கியதில் முருகேசன் தூக்கி வீசப்பட்டு இடுப்பு மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வடிவேல் லேசான காயமடைந்ததாக தெரிகிறது.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் மற்றும் வனப்பகுதியை சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.