கொரோனா காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பாா்படாஸின் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சாா்பாக மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா இந்த விருதைப் பெற்றார்.
இந்நிலையில்,பிரதமரின் சார்பாக விருதைப் பெற்ற வெளியுறவுத் துறை இணையமைச்சா் பபித்ர மாா்கரிட்டா, பாா்படாஸ் நாட்டின் இந்த அங்கீகாரத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்தாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், அவர் சார்பாக இந்த மதிப்புமிக்க விருதை பெற்றுக்கொள்வதும் பெரும் மரியாதையாகக் கருதுகிறேன் என்றார்.