டெல்லியில் அகில பாரதிய அதிவாக்தா பரிஷத் சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
டெல்லியில் மர்கத் அரங்கில் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அகில பாரதிய அதிவாக்தா பரிஷத் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மார்ச் 8 மற்றும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் 75 ஆண்டு கால இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டத்தில் பெண் வழக்கறிஞர்களின் பங்கு குறித்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உரையாற்றுகின்றனர்.
இதையொட்டி மதுரையிலிருந்து பத்து பேர், திருச்சியிலிருந்து 8 பேர் என தமிழகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் டெல்லி புறப்பட்டனர். மதுரை ரயில் நிலையத்தில் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தனர்.