இளைஞர்களுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதே பாஜகவின் இலக்கு என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜீவ் சந்திரசேகர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்த வேகம் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இடைத்தேர்தல் வந்தால் மக்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்ற நிலை நிலவுவதாக கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தலின் அருமையை சிறுவயதிலேயே தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, இந்தியாவில் தேர்தலின்போது ஊழல் நடைபெறுவதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நேரமும் பணமும் மிச்சமாகும் எனவும் தெரிவித்தார்.