ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள ஏரியில், மீன்களை பிடிக்க இளைஞர்கள் வைத்திருந்த வலையில், 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு அதில் இருந்து விடுபட முடியாமல் தவித்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு இளைஞர்கள் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பாணாவரம் வனச்சரகத்தினர், வலையில் சிக்கிய மலைப் பாம்பை மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.