கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட 3 பேர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரளாவிலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீடு, 80 அடி சாலையில் உள்ள சங்கரின் வீடு மற்றும் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணியின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
12 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்ற நிலையில் சில முக்கிய ஆவணங்ள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.