செங்கல்பட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு பகுதியில் வரும் 11ம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் செங்கல்பட்டு ராட்டிண கிணறு பகுதியில் இருந்து செங்கல்பட்டு அரசினர் தொழிற் பயிற்சி கூடம் வரையில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை காவல்துறையினர் உதவியோடு நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.