திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் பிஆர்ஓ என்று அறிமுகம் செய்து கொண்டு பக்தர்களை ஏமாற்றி வசூல் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியை சேர்ந்தவர் பாரூக். ஏற்கெனவே சில மோசடிகளில் ஈடுபட்டு மூன்று முறை சிறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வாட்ஸ் அப் குழு ஒன்று ஏற்படுத்தியவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரின் பிஆர்ஓ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு தரிசன டிக்கெட் உள்ளிட்டவை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின்படி பாரூக்கை போலீசார் கைது செய்தனர்.