செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
திருப்போரூர், தண்டலம் பேருந்து நிலையம் பகுதியில் மும்மொழிக் கல்வி கொள்கையை ஆதரித்து சம கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கத்தை பாஜகவினர் நடத்தினர். இதில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் பிரவீன்குமார், மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சி நிர்வாகிகள் அனைவரும் தொடங்கி வைத்த கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர். இதையடுத்து மும்மொழிக் கல்வியால் கிடைக்கும் பயன் குறித்து பாஜகவினர் எடுத்துரைத்தனர்.