நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியில் மதிய உணவு சமைத்த போது அங்கு வந்த காவல்துறையினர் சமையல் பணிகளை தடுத்து நிறுத்தி அங்கிருந்த வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும் பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1,800 வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்ட்டது.