கன்னியாகுமரி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்னாள் கப்பல் ஊழியர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கருங்குளத்தான்விளை பகுதியை சேர்ந்தவர் பரமேசுக்கும், பக்கத்தில் வீட்டில் வசிக்கும் கணபதியின் குடும்பத்துக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், தகராறு முற்றி பரமேஷை, கணபதி மற்றும் அவரது மனைவி வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.