ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற நபர் பலியானார்.
பீமவரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை இளைஞர்கள் சிலர் கடந்து சென்றனர். அப்போது கடைசியாக வந்த நபர் சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார்
அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.