புதுச்சேரியில் நடிகர் விஜய் சேதுபதி தற்காப்பு கலை கற்றுக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பூரணங்குப்பம் கிராமத்தில் ஜோதி செந்தில் கண்ணன் என்பவர் நடத்தி வரும் தற்காப்பு கலை மையத்தில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்காப்பு கலை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் இவரது தற்காப்பு கலை மையத்தில், நடிகர் விஜய் சேதுபதி தற்காப்பு பயிற்சி பெற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.