கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் த.வெ.க தொண்டர் ஒருவர் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர்தான் கொடியை ஏற்றினாரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் மலையேறினர்.
இந்நிலையில், வெள்ளியங்கிரி 7 வது மலையில் உள்ள மரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை த.வெ.க தொண்டர் ஒருவர் சட்டவிரோதமாக பறக்க விட்டுச் சென்றுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் கொடியை அகற்றினர்.
இதற்கிடையே மலை உச்சியில் த.வெ.க தொண்டர் ஒருவர் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர்தான் கொடியை ஏற்றினாரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.