பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பாா்படாஸ் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் சாா்பாக மத்திய வெளியுறவு மற்றும் ஜவுளித் துறை இணையமைச்சா் பவித்ர மார்கரிட்டா இந்த விருதைப் பெற்றார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், 140 கோடி இந்தியர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.