உலகிலேயே இந்தியாவில் தான் சாலை விபத்து அதிகம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் சிக்கி ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த இறப்புகளில் 66 புள்ளி 4 சதவீதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இது நம் நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.