நாங்கள் உங்களை மீட்பதற்காக வருகிறோம் என்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர்.
ஆனால், இருவரும் 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரையும் அழைத்து வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என டிரம்ப் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.