இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை தோல்வியடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அதன்படி, ஜப்பான் வீராங்கனையும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையுமான நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார். இதில் நவோமி ஒசாகா 4 க்கு 6, 4 க்கு 6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.