திருச்சி மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் செயல்பாடின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதி கர்ப்பிணிகள், மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்காக தொட்டியம் அல்லது மேக்கநாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி சுகாதார நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.