சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் வரதச்சாரியார் பூங்காவில் உள்ள மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.