பெண்கள் பாரத தேசத்தின் சக்தியாக விளங்குவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அன்னையாக, சகோதரிகளாக, நண்பர்களாக, பல்வேறு பரிமாணங்கள் கொண்டு வாழ்கின்ற பெண்கள், விவசாயம் தொடங்கி, தொழில் முனைவோர்கள் வரை, தேசத்தின் வளர்ச்சியில் அபரிமிதமான உழைப்பும், பங்களிப்பும் நல்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு போதிய அதிகாரம் அளிக்கவும், சமூகத்தில் அவர்களது மதிப்பை உயர்த்தவும், பிரதமர் மோடி அயராது உழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், உலகெங்கும் உள்ள அனைத்து மகளிருக்கும், அன்பார்ந்த ‘மகளிர் தின’ நல்வாழ்த்துகள் என்றும் எல.முருகன் தெரிவித்துள்ளார்.