பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பெண்களின் சுதந்திரம், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல்அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மகளிரின் பங்களிப்பை அங்கீகரித்துப் போற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிப்போம் என்றும், பெண்களுக்கான பாதுகாப்பு சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.