தஞ்சை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தஞ்சை கோட்டாட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்ற பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் எவர் சில்வர் பாத்திரம், கட்டில், சைக்கிள், டிரஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.