லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றவுள்ளதை ஒட்டி, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், லண்டனில் சிம்பொனி படைக்கிறதாக குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவால் இந்தியாவிற்கே பெருமை என்று வாழ்த்தியுள்ள ரஜினிகாந்த், அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.