குஜராத் மாநில காங்கிரஸால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்ட முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், குஜராத் மாநிலம் வளர்ச்சியை விரும்புவதாகவும், ஆனால் அங்குள்ள காங்கிரஸால் அதற்கு வழிகாட்ட முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக குஜராத் மக்கள் எதிர்பார்த்த எதையும் தம்மாலும், காங்கிரஸ் கட்சியாலும் நிறைவேற்ற முடியவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.