சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் தொகை வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கான பணி 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் மீண்டும் பணிகள் தொடங்கியதையடுத்து தங்கள் நிலத்துக்கு கூடுதல் தொகையை நிர்ணயம் செய்யக்கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.