வடக்கு அயர்லாந்தில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பெல்பாஸ்ட் நகருக்கு சென்ற ஜெய்சங்கர், அயர்லாந்து அதிபர் மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதை தொடர்ந்து பெல்பாஸ்ட் நகரில் புதிதாக கட்டப்பட்ட இந்திய தூதரகத்தின் புதிய கிளையை திறந்து வைத்தார்.