குஜராத்தின் வால்சாத் நகரில் உள்ள குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாபி பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது.
அதிகாலை இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து 10 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.