அல்லு அர்ஜூன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பாலிவுட் வரை சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த அட்லீ, அடுத்ததாக அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் முக்கிய பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.