பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெ.பி.நட்டா, பாஜக அரசை அமைத்ததற்கு டெல்லி பெண்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆரம்பத்தில் இருந்தே பாஜக கவனம் செலுத்தி வருகிறது எனக்கூறிய ஜெ.பி.நட்டா, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்தே பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக தெரிவித்தார்.