டெல்லி அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களைச் சரிபார்க்க ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.