திண்டுக்கல் சென்று கைதான இந்து முன்னணி நிர்வாகிகளை சந்திக்க முயன்ற காடேஸ்வரா சுப்பிரமணியத்தை திருப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூரில் உள்ள அபிராமியம்மன் கோயிலில் சிலை வைத்து வழிபட முயன்ற பக்தர்களையும், அவர்களை சந்திக்க சென்ற இந்து முன்னணி நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கைதானவர்களை சந்திக்கவும், கோயிலில் வழிபாடு செய்யவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திண்டுக்கல் செல்ல முயன்றார். அவரை திருப்பூரில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கம் எழுப்பிய 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.