குஜராத்தில் தான் வரைந்த ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் நெகிழ்ச்சி அடைந்த ஓவியர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் சூரத் சென்ற பிரதமர் மோடி பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். அப்போது இருபுறமும் திரண்ட பொதுமக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரது ஓவியத்தை ஒருவர் வரைந்து எடுத்து வந்திருந்தார்.
அதனை கவனித்த பிரதமர் மோடி வாகனத்தை நிறுத்தி அந்த ஓவியத்தில் கையொப்பமிட்டு கொடுத்தார். பிரதமர் மோடியின் இந்தச் செயலால் நெகிழ்ந்துபோன ஓவியர், கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.