திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7-ம் நாள் மாசித்திருவிழாவை ஒட்டி சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் 7-வது நாள் நிகழ்வாக ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்ட சேவை நடத்தப்பட்டது. பின்னர் விலாஸ் மண்டபத்தில் தேவியர்களுடன் காட்சியளித்த முருகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஆலயத்தை வலம் வந்து கட்டளை மண்டபம் சென்றடைந்தார். இதனையொட்டி ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.