சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி 252 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக வில் யங் – ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. 8 ஆவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 11 ஓவரை வீசிய குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 13 ஆவது ஓவரை வீசிய குல்தீப் வில்லியம்சன் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து, டாம் லாதாம் – மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்த நிலையில், டாம் லாதாம் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.
இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 252 என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.