சிம்பொனி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா, சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது பேசிய அவர், இளையராஜாவால் ஆசிய கண்டத்திற்கே பெருமை என புகழாரம் சூட்டினார்.