பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசியவர்,
சிம்பொனி இசைப்பது சாதாரண விஷயமல்ல என்றும் இறைவன் அருளால் சிம்பொனி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது என்றும் சிம்பொனியை பதிவிறக்கம் செய்து கேட்கவோ, பார்க்கவோ வேண்டாம் என்று இளையராஜா வேண்டுகோள் விடுத்தார்.
சிம்பொனி அரங்கேற்றத்தின்போது பார்வையாளர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தினர் என்றும் துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி நடத்த திட்டம் உள்ளதாக இளையராஜா தெரிவித்தார்.