ஐபிஎல் போட்டியின் 18-வது சீசன் தொடங்க உள்ள நிலையில் டெல்லி அணியின் வீரர் ஹாரி புரூக் தொடரில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 18-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் டெல்லி அணியின் வீரரான ஹாரி புரூக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விலகலை அறிவித்ததற்காக நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.