மயிலாடுதுறை அருகே வீட்டின் குளியல் அறை சுவற்றில் துளைபோட்டு 17 வயது சிறுமி குளிப்பதை பார்த்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சித்தர்காடு பகுதியை சேர்ந்த செபஸ்டின் என்பவர் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தவெக நிர்வாகிகளை அணுகியுள்ளனர். அவர்கள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து செபஸ்டினை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.