சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒரு அசாதாரணமான ஆட்டம் மற்றும் ஒரு அசாதாரணமான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காக இந்திய கிரிக்கெட் அணியை நினைத்து பெருமைப்படுவதாக அவர் பாராட்டி உள்ளார். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், அற்புதமான ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த வெற்றி வரலாற்றை உருவாக்கி உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது அனல் பறக்கும் ஆற்றலும், ஆடுகளத்தில் நமது அசைக்க முடியாத ஆதிக்கமும் தேசத்தை பெருமைப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அமித்ஷா, இந்த வெற்றி புதிய அளவுகோலை அமைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.