மத்தியப்பிரதேசத்தில், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடியபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மோவ் நகரில் இந்திய அணியின் வெற்றியை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படவே, கல்வீசி தாக்கி கொண்டனர்.
மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து சேதப்படுத்தினர். இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், மோதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.