துணைநிலை ஆளுநர் உரையை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், 2024-25ம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாரளிக்க, அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். துணைநிலை ஆளுநர் உரையையடுத்து, சட்டப்பேரவை, நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.