கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அடுத்த மல்லிகார்சுன துர்கம் பகுதியில் கோயில் திருவிழாவை ஒட்டி எருது விடும் விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டிக்கொண்டு அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.