கோவில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 கார்கள் அப்பளம் போல நொறுங்கின.
தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, சிவனைந்தபுரம் அருகே சாலை தடுப்பு சுவர் மீது மோதியது. இதனால், அவ்வழியாக வந்த 2 கார்கள் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.