அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் : இந்தியாவின் உதவியை நாடும் சீனா!
Mar 15, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் : இந்தியாவின் உதவியை நாடும் சீனா!

Murugesan M by Murugesan M
Mar 13, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘பரஸ்பர வெற்றிக்காக’ சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ( Wang Yi ) வாங் யி தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் நட்புணர்வுடன் கைகோர்த்தால் ​​சர்வதேச உறவுகளில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சமீபத்தில், லண்டனில் உள்ள (Chatham House) சாத்தம் ஹவுஸில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீனாவுடன் நிலையான உறவுகளை இந்தியா விரும்புகிறது என்றும் எல்லையில் அமைதி இல்லாவிட்டால், அது இரு நாடுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்” என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் மூன்றாவது அமர்வின் ஒரு பகுதியாக செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, சீனா இந்தியா இரு நாடுகளும் கூட்டாளிகளாக, ஒருவருக்கொருவர் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

எல்லைப் பிரச்சினைகள் ஒட்டுமொத்த உறவுகளைப் பாதிக்க விடக்கூடாது என்றும், இரு நாடுகளும் “டிராகன் மற்றும் யானையின் கூட்டு முயற்சியாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும், இணைந்து பணியாற்றுவதே இரு தரப்பினருக்கும் சரியான தேர்வாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இருநாடுகளுக்கும் இடையேயான 75 ஆண்டுகால உறவுகளை குறிக்கும் இந்த ஆண்டில், இந்தியா சீனா உறவில் இது ஒரு முக்கிய திருப்பமாகும். கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு ஒரு வெற்றிச் சந்திப்பாகும். அதன்பிறகே, இந்திய சீனா உறவில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

அதன்பின்னர், இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இருமுறை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து பேசியுள்ளார். கூடுதலாக, ஜனவரி மாதம் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீன வெளியுறவுச் செயலாளர் மற்றும் துணை அமைச்சருடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்தார்.

இதன் விளைவாக, கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்கவும், இருநாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை தொடங்கவும், சீனர்களுக்கு விசா வழங்கவும், கொள்கை அளவில் இருநாடுகளும் ஒப்பு கொண்டன. எல்லை பதற்றத்தைக் குறைக்கவும் இருநாடுகளும் நடவடிக்கை எடுத்தன.

சீனாவுடன் வர்த்தகப் போரை அமெரிக்க தொடங்கியுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இருமடங்கு அதிகரித்துள்ளார். பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 15 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது.மேலும், 25 அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்கா போரை விரும்புகிறது என்றால், அது வர்த்தகப் போராக இருந்தாலும் சரி, வேறு வகையான போராக இருந்தாலும் சரி, இறுதிவரை போராட தயாராக உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான போருக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில்தான் இந்தியாவின் உதவி சீனாவுக்குத் தேவைப்படுகிறது. எனவே, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லி, சீனாவும் இந்தியாவும் கைகோர்த்தால் உலகளவில் தெற்கிற்கான வாய்ப்பு மேம்படும் என கூறியுள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது, பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர்.

Tags: AIDchinaசீனாஇந்தியாTrade war with America: China seeks India's help!அமெரிக்காவுடன் வர்த்தகப் போர்
ShareTweetSendShare
Previous Post

பிடிஆரின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? : அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies