சென்னை போரூர் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை – போரூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது.
பழுதாகி நின்ற பேருந்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஆனதால், போரூர் மேம்பாலத்தில் இருந்து ராமாபுரம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
மேலும், கொளுத்தும் வெயிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டுகள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில், போக்குவரத்தை உடனடியாக சீர் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.